Thursday, June 16, 2016

ஸ்பிண்டில் கூர் நோக்கும் கருவி



 அப்பக்ஸ் ஸ்பின்டில் கூர் நோக்கும் கருவி 


அப்பக்ஸ் நிறுவனம் உலகிலேயே முதன் முறையாக ஒளியியலை ஆதாரமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்பின்டில் மற்றும் ரிங்கு மையம் காட்டும் கருவியை அளித்துள்ளது.

இது அடிப்படையில் ஒரு பெரிஸ்கோப் ஆகும். இந்த பெரிஸ்கோப் ஸ்பின்டில் மையக் காட்சியை உபயோகிப்பவருக்கு எளிதாக அருகில் காட்டுகிறது. மேலும் இது ஒரு   சுவிட்சு உடன் கூடிய காந்தத்துடன் இணைக்கப் பட்டு விளங்குவதால் , இயந்திரத்தில் ஓட்ட வைத்து விட்டு உபயோகிப்பவர் தன பணிகளை சிரமமின்றி செய்யலாம். பணி முடிந்ததும் கழற்றிக் கொள்ளலாம்.

இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் காட்சி வடிவம் மிகவும் துல்லியமானது.  ஸ்பிண்டிலுக்கும் ரின்குக்கும் இடையே உள்ள இடைவெளியை நமக்கு பெரிதாக்கப்பட்ட பிம்பமாகக் கொடுக்கிறது. இந்த படத்தை பாருங்கள்.



மேலும் இந்த காணொளியையும் பாருங்கள்.






No comments:

Post a Comment