அப்பக்ஸ்- ரிங் மற்றும் கதிரை மையப் படுத்தும் கருவி
|
அப்பக்ஸ் கருவியின் பல அளவுகள் |
நூற்பு ஆலைகளுக்கு மிகவும் வசதியான இன்னொரு உபகரணத்தை அப்பக்ஸ் நிறுவனம் அறிமுகப் படுத்துகிறது.
நூற்புக் கதிர் (spindle) எக்காலத்திலும் அதன் ரிங்கு (ring) உடன் மையம் கொண்டு இருத்தல் இன்றியமையாதது ஆகும். நடப்பில் இந்த மையம் கொள்ளுதல் சரிவர கவனிக்கப் படுவது இல்லை. இதற்கு காரணம் , இதற்கான சரியான உபகரணங்கள் இல்லாததே.
சரியான மையம் இல்லாததால் கெண்டையில் நூல் சரி விகிதமாக இல்லாமல் ஒரு புறம் தளர்வாகவும் மறுபுறம் இறுக்கமாகவும் சுற்றப் படும். டிராவலர் தேய்மானமும் அதிகம்.
மிக எளிய தட்டு முதல் அதிக செலவு பிடிக்கும் எலக்ட்ரானிக் உபகரணங்கள் இருந்தும் நூற்பாலைகள் இவ்விஷயத்தில் திருப்தி அடையவில்லை.
அப்பெக்ஸ் அளிக்கும் கருவி மிக எளியது ஆயினும் இவ்விஷயத்தில் நூற்பாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வது. இதில் ஒற்றைத் தண்டு ஒன்று கதிரில் செருகப்படுகிறது. தண்டின் வெளி வட்டம் ரிங்கின் விட்டத்துக்கு சமமானது. மிகக் குறுகிய சந்துடன் ரிங்கை அது தானாகவே மையத்துக்குள் இழுத்து விடுகிறது. தொழிலாளர் ரிங்கின் ஸ்க்ரூக்களை தளர்த்திய உடன் ரிங்கும் , கதிரும் ஒன்றுக்கொன்று மையத்துக்குள் வந்து விடுகின்றன. உடனே அவர் ஸ்க்ரூக்களை இறுக்கி விடலாம். இதற்குப் பிடிக்கும் நேரம் வெறும் பத்து வினாடிகள் மட்டுமே.
இதில் இன்னொரு விஷயம் அப்பக்ஸ் கருவியில் ரிங் டிராவலரை அகற்ற வேண்டியதில்லை. இதில் ஆலைக்கு பெருத்த சேமிப்பு உள்ளது. இந்த கருவியை ரிங் பிரேமை நிறுத்தித்தான் பார்க்க வேண்டுமாதலால் , இயந்திரம் வீணாக ஓடும் செலவு மிஞ்சும். மொத்தத்தில் இதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு
|
பாக்கிங் வடிவம் |
|
செங்குத்து ரஸ மட்டம் |
1. குறைந்த விலையிலான கருவி.
1,00,000 கதிருக்கு மேல் மையம் திருத்தலாம்.
2. டிராவலரை அகற்றத் தேவையில்லை.
3. ஒரு கதிருக்கு ஆகும் நேரம் பத்து வினாடிகள் மட்டுமே. தனியாக பயிற்சி தேவையில்லை. யாரும் இயக்கலாம்.
4. கதிர் மற்றும் ரிங்குக்கு இடையேயான மைய வேறுபாடு 0.1 மில்லி மீட்டர் அஅளவேயானது. இது முன்னணி எலக்ட்ரானிக் சாதனங்களால் கூட எளிதில் சாத்தியப் படாத ஒன்று.
5. அனைத்து ரிங் அளவுகளிலும் கிடைக்கிறது. (36,38,40,42 மி மீ )
6. ஒரு கருவி ஆயுள் 1,00,000 கதிர்களுக்கு மேல்.
7. கதிரின் அனைத்து நிலைகளிலும் அளக்க நீண்ட தண்டு .
8. உபரியான இரச மட்டம் துல்லியமாக நிறுத்த உதவுகிறது.
எங்கள் அப்பக்ஸ் கருவியின் செயல் முறை விளக்கப் படம் கீழே
அப்பக்ஸ் பிரிசிடெக்
2/36, ஸ்ரீ அம்பாள் நகர், விளாங்குறிச்சி, கோயம்புத்தூர்- 641 035
தொலை பேசி: 91 422 2667026
கை பேசி : 91 98430 35014
apexpreci@eth.net , apexpreci@gmail.com
www.apexprecitech.com
No comments:
Post a Comment